Wednesday 20 December 2017

படித்ததில் பிடித்தது - 1


ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா கேட்டார்,  “மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்....  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள்.. நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது!

அப்பா சொன்னார், இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு! மகள் சிரித்தாள்.,,

அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார்.  முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது, கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. “ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடுகள் அனைத்தும்  இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்" அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். கட்டுபாடு, நேர்மை மற்றும் ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

ஒரு பெண்ணை அவ்வளவு உயரே பறக்க வைக்கும். அதை சுதந்திரம் என்ற  போர்வையால் மூடிவிட்டு இஷ்டப்படி வாழும் போது கடைசியில் நூலறுந்த பட்டமாக ஆகிவிடுவாள் என்றார்.
இதை அறிந்து கொண்ட மகளோ  மௌமானாள். ! இது ஆண்களுக்கும் சேர்த்துதான்.!!!