Sunday 31 December 2017

2017ஆம் ஆண்டின் வைரல் ஆன காணொளி காட்சி தொகுப்பு


2017ஆம் ஆண்டில் இணையத்தில் உலா வந்து காணொளி காட்சிகளில், சமூக வலைதளங்களில் வைரல்  ஆகி  மக்கள் மனம் கவர்ந்த, சிறந்த காணொளி காட்சிகளின் தொகுப்பு  உங்களுக்காக....

Wednesday 27 December 2017

பார்த்ததில் ரசித்தது: ஒட்டகசிவிங்கி யானையாக மாறுமா?

ந்த காணொளி காட்சி நண்பர் ஒருவர் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் ஷேர் செய்திருந்தார், ஒரு கோணத்தில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் நிற்பது போல்  தெரியும் உருவம், வேறொரு கோணத்தில் யானை போல் மாறுகிறது, பார்த்து ரசிக்க காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு 

Wednesday 20 December 2017

படித்ததில் பிடித்தது - 1


ப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா கேட்டார்,  “மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்....  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள்.. நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது!

அப்பா சொன்னார், இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு! மகள் சிரித்தாள்.,,

அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார்.  முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது, கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. “ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடுகள் அனைத்தும்  இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்" அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். கட்டுபாடு, நேர்மை மற்றும் ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

ஒரு பெண்ணை அவ்வளவு உயரே பறக்க வைக்கும். அதை சுதந்திரம் என்ற  போர்வையால் மூடிவிட்டு இஷ்டப்படி வாழும் போது கடைசியில் நூலறுந்த பட்டமாக ஆகிவிடுவாள் என்றார்.
இதை அறிந்து கொண்ட மகளோ  மௌமானாள். ! இது ஆண்களுக்கும் சேர்த்துதான்.!!!

Wednesday 6 December 2017

வணக்கம் - இது உங்கள் டைம்ஸ்

இது உங்கள் டைம்ஸ்

தமிழர் டைம்ஸ் மின்னிதழில் வாசகர் படைப்புகளை வரவேற்கிறோம், உங்கள் வாழ்கையில் நடந்த சுவையான சம்பவங்கள், நீங்கள் சந்தித்த நல்ல மனிதர்கள், துன்பம் தந்த தீயவர்கள், நீங்கள் சந்தித்த மறக்க முடியாத வெற்றிகள், தோல்விகள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் குறிப்புகள், நகைச்சுவை துணுக்குகள், உங்கள் தெருவில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிறைகள், குறைகள், கதைகள், சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் கட்டுரைகள், மக்களுக்கு பயன் தரும் செய்திகள், நீங்கள் ரசித்த புகைப்படங்கள், காணொளி காட்சிகள், பயண கட்டுரைகள், நீங்கள் ஏதாவது குறிப்பிட்ட துறையில் வல்லுனராக இருந்தால் அந்த துறையில் வரவிருக்கும் நவீன மாற்றங்கள் பற்றிய செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள், வியக்க வைக்கும் அதிசயங்கள் என்று எழுதுவதற்கும், பகிர்வதற்கும் நம்மை சுற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். நீங்கள் அனுப்பும் படைப்பு பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை தமிழர் டைம்ஸ் மின்னிதழ் மூலமாக அல்லது இணை இதழ்களின் மூலமாக சென்றடையும். படைப்புகளை எங்களுக்கு அனுப்பும்போது உங்கள் பெயர், ஊர், அலைபேசி எண் இணைத்து அனுப்பவும்.       

எங்களுக்கு உங்கள் படைப்புகளை தமிழில் (Unicode font)  தட்டச்சு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamilartimes@gmail.com

வாட்ஸ் ஆப் எண்: 9514214229, 9751572240 

ஏற்கெனவே இணையத்தில் வெளி வந்த செய்திகள், வன்முறையை தூண்டும் செய்திகள், மத துவேஷத்தை வளர்க்கும் கட்டுரைகள்,  ஆபாச பதிவுகள் போன்றவற்றை எங்களுக்கு அனுப்ப வேண்டாம்.