Monday 12 February 2018

பழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்


நாள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு தூங்குவது, இது போன்று நீங்கள் இதுவரை செய்து வந்திருந்தால் இனி அந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்.


வியட்நாம் நாட்டில்  தூங்கும் போது போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கி இருக்கிறாள் லீ தி சோன் என்ற பதினான்கு வயது பெண், தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க, பழுதான அந்த சார்ஜர் வயரில் இருந்து பாய்ந்த மின்சாரம் அவர் உயிரை குடித்து விட்டது. காலையில் அவரது தாய் மகளை எழுப்பி முயன்ற போது, மகள் படுக்கையில் சிறிதும் உணர்வில்லாமல் அசையாமல் கிடக்கவே சந்தேகப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்று போது, அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனேவே உடலில் மின்சாரம் பாய்ந்ததால் இறந்து போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.



அந்த பெண் பயன்படுத்தி வந்த  மிகவும் விலை உயர்ந்த ஐ போன் நிறுவன சார்ஜர் பழுதாகி உள்ளது, ஒரிஜினல் சார்ஜர் விலை மிக அதிகமாக இருப்பதால் அந்த பெண் போலி சார்ஜரை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறாள், அந்த சார்ஜர் வயர் எரிந்து கம்பிகள் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது, அந்த சார்ஜரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பி கம்பிகள் வெளியில் தெரிந்த பகுதியை டேப் போட்டு ஒட்டி பயன்படுத்தி வந்திருக்கிறாள்,  சம்பவம் நடந்த அன்று சார்ஜர் வயரில் போடபட்ட டேப் பிரிந்து கம்பிகள் மீண்டும் தெரிய துவங்கியுள்ளது, அதை கவனிக்காமல் போனை சார்ஜில் போட்டு படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு தூங்க,  தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க அவள் மேல் மின்சாரம் பாய்ந்து தூக்கத்திலேயே அவள் உயிரை மின்சாரம் குடித்து விட்டது.

இனிமேல் நீங்கள் தூங்கும் போது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய மாட்டீர்கள் அல்லவா? 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்