இன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் போது, கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களை உற்சாகபடுத்துவதற்காக மேலிருந்து பனி கொட்டுவது போல் பூக்கள் கொட்டுவது போல் நுரையுடன் கூடிய ஃபோம் ஸ்ப்ரேக்கள் நீள வடிவ பேக்கிங்குகளில் கேக் விற்கும் பேக்கரிகளிலேயே கிடைக்கிறது.
இந்த ஃபோம் ஸ்ப்ரேக்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் வாயுக்கள் வெளியேறும் போது நெருப்பு அருகில் இருந்தால் உடனே தீ பற்றி எரிய தொடங்கி விடும். இந்த விபரீதம் புரியாமல் பலர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கும் கேக் அருகே இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர், விளைவு, கேக் வெட்டும் பிறந்த நாள் கொண்டாடுபவர் தீப்பிடித்து அலறுகிறார்கள். சந்தோஷமாக தொடங்கும் பிறந்த நாள் விழா தீக்காயங்களோடு சோக தினமாக மாறி விடுகிறது.
பிறந்த நாளன்று மெழுவர்த்தியை தீபத்தை ஊதி அணைத்து விழா கொண்டாடுவதை விட நம் தமிழ் மரபின் படி வீட்டில் விளக்குகளை ஏற்றி (மெழுகுவர்த்தி, ஃபோம் ஸ்ப்ரே இல்லாமல்) பிறந்த நாள் கொண்டாடலாம். இனி வரும் காலங்களிலாவது தமிழ் மரபுப்படி விளக்குகள் ஏற்றி பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழுங்கள்.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------