Wednesday 11 September 2019

அபராதம் தவிர்க்க ஹெல்மெட்டிலேயே லைசென்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் ஒட்டியவர்

தாவது ஒரு குறிப்பிட்ட சான்றிதழை மறந்துவிட்டு வாகனத்தை ஓட்டி டிராஃபிக் போலீசாரிடம் பிடிபட்டால் கிட்டத்தட்ட தன் ஒரு மாத சம்பளத்தையே அபராதமாக செலுத்த நேரிடும் என்று கணக்கு போட்ட குஜராத் மாநிலத்திலுள்ள , வடோதரா பகுதியை சேர்ந்த இன்சூரன்ஸ் ஊழியர் ஒருவர் டிராஃபிக் போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் கட்டுவதை தவிர்ப்பதற்காக தன் ஹெல்மெட்டிலேயே லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சி மற்றும் பியூசி சான்றிதழ்களை ஒட்டியுள்ளார். 

அபராதம் (விதித்த) வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல் என்று நினைத்த  ராம் ஷா என்ற அந்த நபர் தினமும் வேலை நிமித்தமாக அவர் வசிக்கும் நகரம் முழுவதும்  இரு சக்கர வாகனத்தில் சுற்றி வருபவர், இப்போது இவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இவரிடம் டிராஃபிக் போலீசார் எவரும் விதிமீறல் என்று சொல்லி அபராதம் வசூலிக்க முடியாது. ஏனென்றால், இவர் தன் ஹெல்மெட்டை டிராஃபிக் போலீசார் பார்க்கும்படி எடுத்து காண்பிக்கிறார்,  டிராஃபிக் போலீசார் கேட்கும் சகல சன்றிதழ்களையும் தன் ஹெல்மெட்டிலேயே இவர் ஒட்டி வைத்துள்ளாரே. இவரிடம் அவர்கள் எப்படி அபாரதம் வசூலிக்க முடியும்?

இவரை பற்றி டிவிட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் புகைப்படத்துடன் வெளியுட்டுள்ள டிவீட்டில், இவர் " பைக்கை ஓட்டுவதற்கு முன்பு முதலில் நான் செய்யும் வேலை ஹெல்மெட் அணிவது தான், அதனால் தான் ஹெல்மெட்டிலேயே எல்லா கோப்புகளையும் ஒட்டி விட்டேன், ஆகவே, இனி புதிய போக்குவரத்து விதிகளினால் நான் எந்த அபராதத்தையும்  சந்திக்க வேண்டியதில்லை" என்று கூறியிருக்கிறார். 

ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இவர், வாகனத்தை ஓட்டும் முன்பு மறக்காமல் ஹெல்மெட்டை அணிந்து கொள்வதால் அபராத சிக்கலில் இருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையை பின்பற்றத் தொடங்கி விட்டார். 

ஏற்கெனவே, உத்திரப்பிரதேசத்தில் டிராஃபிக் போலீசார், காரை ஒட்டி செல்லும்போது காருக்குள் ஹெல்மெட் அணியாமல் இருந்தார் என்று ஒருவருக்கு அபராதம் விதித்ததை தொடர்ந்து அவர் இன்று வரை கார் ஓட்டும் போதும் ஹெல்மெட் அணிந்து செல்கிறார், இந்த விஷயத்தை குறித்து உ.பி மாநில காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் போதும் இவர் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் காரையும் ஹெல்மெட் அணிந்தே ஓட்டுவது தொடர்கிறது.

--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 5 March 2019

இது எப்படி இருக்கு - ரஜினியும் - தனுசும் 1

இது எப்படி இருக்கு - ரஜினியும் - தனுசும் - 1

மீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த முரட்டு காளை திரைப்படம் பார்த்து கொண்டிருந்தேன், இந்த பூவிலும் வாசம் உண்டு பாடலில் ஒரு காட்சி பளிச்சென்று என் மனதில் தனுஷ் நடித்த இன்னொரு காட்சி மின்னி மறைந்தது,  தனுஷ் டப்ஸ்மாஷ் பண்ணியிருக்கார் போல, நீங்களும் பார்த்து மகிழுங்கள்... அடுத்து ரஜினியின் அண்ணாமலை பட பாம்பு சீனும், யாரடி நீ மோகினி   பட பாம்பு சீனும் உங்கள் மனதில் தோணுதா? 

Sunday 8 April 2018

பார்த்ததில் ரசித்தது

சீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் 

இதை எங்க போய் சொல்றது? 

பாப்பா நீ படிச்ச ஸ்கூலில் அவரு பிரின்சிபால்! 

செய்யுற வேலையில கவனமா இருக்க வேணாமா? 

Ammu Ammu

null
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 23 March 2018

பார்த்ததில் ரசித்தது

பார்க்க அழகா இருக்கா கொஞ்சம் நல்லா பாருங்க 

பிள்ளைக்கு ரொம்ப பசி போலருக்கு, புறா வாயிலிருந்து பிடுங்கி தின்னுது

கொஞ்சம் கவனமா இல்லைனா இப்படிதான்  

சின்ன வயசுல தப்பு செஞ்சு மாட்டிகிட்டா இந்த பூனை மாறி தான் பம்மியிருப்பிங்க 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 12 February 2018

பழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்

நாள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு தூங்குவது, இது போன்று நீங்கள் இதுவரை செய்து வந்திருந்தால் இனி அந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்.

வியட்நாம் நாட்டில்  தூங்கும் போது போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கி இருக்கிறாள் லீ தி சோன் என்ற பதினான்கு வயது பெண், தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க, பழுதான அந்த சார்ஜர் வயரில் இருந்து பாய்ந்த மின்சாரம் அவர் உயிரை குடித்து விட்டது. காலையில் அவரது தாய் மகளை எழுப்பி முயன்ற போது, மகள் படுக்கையில் சிறிதும் உணர்வில்லாமல் அசையாமல் கிடக்கவே சந்தேகப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்று போது, அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனேவே உடலில் மின்சாரம் பாய்ந்ததால் இறந்து போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் பயன்படுத்தி வந்த  மிகவும் விலை உயர்ந்த ஐ போன் நிறுவன சார்ஜர் பழுதாகி உள்ளது, ஒரிஜினல் சார்ஜர் விலை மிக அதிகமாக இருப்பதால் அந்த பெண் போலி சார்ஜரை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறாள், அந்த சார்ஜர் வயர் எரிந்து கம்பிகள் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது, அந்த சார்ஜரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பி கம்பிகள் வெளியில் தெரிந்த பகுதியை டேப் போட்டு ஒட்டி பயன்படுத்தி வந்திருக்கிறாள்,  சம்பவம் நடந்த அன்று சார்ஜர் வயரில் போடபட்ட டேப் பிரிந்து கம்பிகள் மீண்டும் தெரிய துவங்கியுள்ளது, அதை கவனிக்காமல் போனை சார்ஜில் போட்டு படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு தூங்க,  தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க அவள் மேல் மின்சாரம் பாய்ந்து தூக்கத்திலேயே அவள் உயிரை மின்சாரம் குடித்து விட்டது.

இனிமேல் நீங்கள் தூங்கும் போது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய மாட்டீர்கள் அல்லவா? 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 31 January 2018

மகிழ்மதி ராஜ்யத்தை பார்வையிடலாமா...

ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள், அங்கு சென்று வந்த ஒரு ரசிகர் தான் ரசித்த அந்த பிரமாண்ட செட்களை காணொளி காட்சியாக பகிர்ந்துள்ளார், அந்த காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு: 

--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 24 January 2018

மகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு

ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் போது, கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களை உற்சாகபடுத்துவதற்காக மேலிருந்து பனி கொட்டுவது போல் பூக்கள் கொட்டுவது போல் நுரையுடன் கூடிய ஃபோம் ஸ்ப்ரேக்கள் நீள வடிவ பேக்கிங்குகளில் கேக் விற்கும் பேக்கரிகளிலேயே கிடைக்கிறது.    

இந்த ஃபோம் ஸ்ப்ரேக்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் வாயுக்கள் வெளியேறும் போது நெருப்பு அருகில் இருந்தால் உடனே தீ பற்றி எரிய தொடங்கி விடும். இந்த விபரீதம் புரியாமல் பலர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கும் கேக் அருகே இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர், விளைவு, கேக் வெட்டும் பிறந்த நாள் கொண்டாடுபவர் தீப்பிடித்து அலறுகிறார்கள். சந்தோஷமாக தொடங்கும் பிறந்த நாள் விழா தீக்காயங்களோடு சோக தினமாக மாறி விடுகிறது. 

பிறந்த நாளன்று மெழுவர்த்தியை தீபத்தை ஊதி அணைத்து விழா கொண்டாடுவதை விட நம் தமிழ் மரபின் படி வீட்டில் விளக்குகளை ஏற்றி (மெழுகுவர்த்தி, ஃபோம் ஸ்ப்ரே இல்லாமல்) பிறந்த நாள் கொண்டாடலாம். இனி வரும் காலங்களிலாவது தமிழ் மரபுப்படி விளக்குகள் ஏற்றி பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழுங்கள்.