Sunday, 8 April 2018

பார்த்ததில் ரசித்தது



சீன கட்டிடக்கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் கட்டிடம் 


இதை எங்க போய் சொல்றது? 

பாப்பா நீ படிச்ச ஸ்கூலில் அவரு பிரின்சிபால்! 

செய்யுற வேலையில கவனமா இருக்க வேணாமா? 

Ammu Ammu

null
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 23 March 2018

பார்த்ததில் ரசித்தது



பார்க்க அழகா இருக்கா கொஞ்சம் நல்லா பாருங்க 



பிள்ளைக்கு ரொம்ப பசி போலருக்கு, புறா வாயிலிருந்து பிடுங்கி தின்னுது


கொஞ்சம் கவனமா இல்லைனா இப்படிதான்  



சின்ன வயசுல தப்பு செஞ்சு மாட்டிகிட்டா இந்த பூனை மாறி தான் பம்மியிருப்பிங்க 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday, 12 February 2018

பழுதான போலி சார்ஜர் வயரால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் # உண்மை சம்பவம்


நாள் முழுவதும் விழித்திருக்கும் போது ஸ்மார்ட்போனை இடைவிடாமல் பார்ப்பது, சார்ஜ் தீர்ந்தவுடன் தூங்கும் நேரத்தில் சார்ஜ் போட்டு விட்டு தூங்குவது, இது போன்று நீங்கள் இதுவரை செய்து வந்திருந்தால் இனி அந்த பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள்.


வியட்நாம் நாட்டில்  தூங்கும் போது போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்கி இருக்கிறாள் லீ தி சோன் என்ற பதினான்கு வயது பெண், தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க, பழுதான அந்த சார்ஜர் வயரில் இருந்து பாய்ந்த மின்சாரம் அவர் உயிரை குடித்து விட்டது. காலையில் அவரது தாய் மகளை எழுப்பி முயன்ற போது, மகள் படுக்கையில் சிறிதும் உணர்வில்லாமல் அசையாமல் கிடக்கவே சந்தேகப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்று போது, அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனேவே உடலில் மின்சாரம் பாய்ந்ததால் இறந்து போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.



அந்த பெண் பயன்படுத்தி வந்த  மிகவும் விலை உயர்ந்த ஐ போன் நிறுவன சார்ஜர் பழுதாகி உள்ளது, ஒரிஜினல் சார்ஜர் விலை மிக அதிகமாக இருப்பதால் அந்த பெண் போலி சார்ஜரை குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறாள், அந்த சார்ஜர் வயர் எரிந்து கம்பிகள் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது, அந்த சார்ஜரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பி கம்பிகள் வெளியில் தெரிந்த பகுதியை டேப் போட்டு ஒட்டி பயன்படுத்தி வந்திருக்கிறாள்,  சம்பவம் நடந்த அன்று சார்ஜர் வயரில் போடபட்ட டேப் பிரிந்து கம்பிகள் மீண்டும் தெரிய துவங்கியுள்ளது, அதை கவனிக்காமல் போனை சார்ஜில் போட்டு படுக்கைக்கு அருகில் வைத்து விட்டு தூங்க,  தூக்கத்தில் தெரியாமல் சார்ஜர் வயர் மேல் புரண்டு படுக்க அவள் மேல் மின்சாரம் பாய்ந்து தூக்கத்திலேயே அவள் உயிரை மின்சாரம் குடித்து விட்டது.

இனிமேல் நீங்கள் தூங்கும் போது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய மாட்டீர்கள் அல்லவா? 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 31 January 2018

மகிழ்மதி ராஜ்யத்தை பார்வையிடலாமா...


ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைந்துள்ள பாகுபலி படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட செட்கள் பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள், அங்கு சென்று வந்த ஒரு ரசிகர் தான் ரசித்த அந்த பிரமாண்ட செட்களை காணொளி காட்சியாக பகிர்ந்துள்ளார், அந்த காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு: 

--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 24 January 2018

மகிழ்ச்சியை பறிக்கும் பிறந்த நாள் விழா கொண்டாட்ட விபரீதங்கள் - எச்சரிப்பு பதிவு


ன்றைய நவநாகரிக உலகில் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நண்பர்கள், உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி உள்ளது. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் போது, கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களை உற்சாகபடுத்துவதற்காக மேலிருந்து பனி கொட்டுவது போல் பூக்கள் கொட்டுவது போல் நுரையுடன் கூடிய ஃபோம் ஸ்ப்ரேக்கள் நீள வடிவ பேக்கிங்குகளில் கேக் விற்கும் பேக்கரிகளிலேயே கிடைக்கிறது.    


இந்த ஃபோம் ஸ்ப்ரேக்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் வாயுக்கள் வெளியேறும் போது நெருப்பு அருகில் இருந்தால் உடனே தீ பற்றி எரிய தொடங்கி விடும். இந்த விபரீதம் புரியாமல் பலர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கும் கேக் அருகே இந்த ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர், விளைவு, கேக் வெட்டும் பிறந்த நாள் கொண்டாடுபவர் தீப்பிடித்து அலறுகிறார்கள். சந்தோஷமாக தொடங்கும் பிறந்த நாள் விழா தீக்காயங்களோடு சோக தினமாக மாறி விடுகிறது. 


பிறந்த நாளன்று மெழுவர்த்தியை தீபத்தை ஊதி அணைத்து விழா கொண்டாடுவதை விட நம் தமிழ் மரபின் படி வீட்டில் விளக்குகளை ஏற்றி (மெழுகுவர்த்தி, ஃபோம் ஸ்ப்ரே இல்லாமல்) பிறந்த நாள் கொண்டாடலாம். இனி வரும் காலங்களிலாவது தமிழ் மரபுப்படி விளக்குகள் ஏற்றி பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழுங்கள்.

--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 17 January 2018

படித்ததில் பிடித்தது - 2 விளம்பர தொல்லை


ம்மைப் போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான யாரோ ஒருவர் தான் இதை எழுதியிருக்க வேண்டும்.  சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது..

உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜம்தானா?

காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணிநேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.

விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று சர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல இருக்கு.

ரெண்டுக்கு போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உட்காராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில் துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.

“அட நிம்மதியா காலைகடன் கழிக்க கூட விடமாட்டீங்களா”என்றால் “உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார் “அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங் கன்னா கிருமிகள் எல்லாம் செத்துரும் நாள் முழுக்க டாய்லட் நல்லா இருக்கும்” என்கிறார்.

“யோவ் நான் என்னய்யா நாள்முழுக்க டாய்லட்லயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “ சார் ஸ்மார்ட் டாய்லட் ஸ்மாட்டஸ்ட் டாய்லட்டர்” என்கிற கான்ட்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்றபடி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.

“யோவ் வெளிநாடு போறது இருக்கட்டும் நான் முதல்ல கக்கா போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை சாத்தவேண்டி இருந்திச்சு.

ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “சார் பாருங்க உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா வந்திருக்கிறேன்”என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.

“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்ஸ்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்ல இல்ல அப்போ எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.

வேண்டாம் விட்டுடங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்கிறார். “யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்,

அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை மூக்குக்கு அருகே நீட்டுகிறார்.

“இந்தாம்மா இந்த பத்து, படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பள குளிக்கிற இடத்துல உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.

“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க, உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக்களைய இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப்பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.

“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க போல”ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு.

நிம்மதியா சப்பிடலாம்னு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.

பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவிகிட்ட கேக்குறா “பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”. என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில், “உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும். பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.

“அட நிம்மதியா சப்பிடவும் விடமாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா? எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ, அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”

“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “இரும்பு சத்து சார் இரும்பு சத்து” என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,

அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான். அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன் ”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டைதான்யா” என்கிறேன்.

அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.

”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா என்ன ஆச்சு” என்றால் “தரையெல்லாம் கிருமிகள் சார்.

எங்க ஃப்ளோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்னிடும். காலை தூக்குங்க சார்” என்றபடி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.

”கண்னுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.

காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில கிருமி, நடக்குற தரையிலும் கிருமி, உட்காந்தா கிருமி, உட்காருற இடத்திலயும் கிருமி, முகத்தை தொடச்சா கிருமி, சாப்பிட்டா கிருமி, சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி,  வெளியில போனா, கிருமி உள்ள வந்தா கிருமி, மண்டைல கிருமி, தொண்டையில கிருமி, வாயில கிருமி, வாசலில கிருமி, துணியில கிருமி, தும்மினா கிருமி, தூங்கினா கட்டில்ல கிருமி, தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.

“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டுதானே இருக்கானுங்க. மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகளும் வாழ்ந்திகிட்டு இருந்திருக்கு.

அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும். இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க?

ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப்பார்த்தா, அவள் சொன்னாள் “கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு. இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது. முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம். ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.

இப்போதான் நானும் என் மனைவியும், கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.
 நன்றி: வாட்ஸ் ஆப் நண்பர்கள் குழு 
--------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

--------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday, 8 January 2018

சிரிக்க வைக்கும் பிழைகள்


ங்கில மொழியில் ஒரு எழுத்தை மாற்றி எழுதினாலும் அந்த சொல்லின் அர்த்தமே முழுவதும் மாறி விடும், நோட்டு புத்தகத்திலோ, கடிதத்திலோ எழுதும்போது பிழை ஏற்பட்டால் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் விளம்பர பலகை, பள்ளிகளில் வைக்கப்படும் அறிவிப்பு பலகை போன்றவற்றில் எழுத்து பிழை ஏற்பட்டால்... கீழே நீங்கள் பார்ப்பது அப்படி பொதுமக்கள் பலர் பார்த்து சிரித்த பத்து ஆங்கில பிழைகள்.... 

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 3 January 2018

செய்து பாருங்கள் - அலங்கார வண்ண மின் விளக்குகள்



தேவையில்லாத குப்பையாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களும் சில மீட்டர் (கொடி கட்ட பயன்படும்) வண்ண கயிறுகளும் சில நிமிடங்களில் எப்படி வீட்டை அலங்கரிக்கும் வண்ண விளக்குகளாக மாறுகிறது பாருங்கள். 

--------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்