ஏதாவது ஒரு குறிப்பிட்ட சான்றிதழை மறந்துவிட்டு வாகனத்தை ஓட்டி டிராஃபிக் போலீசாரிடம் பிடிபட்டால் கிட்டத்தட்ட தன் ஒரு மாத சம்பளத்தையே அபராதமாக செலுத்த நேரிடும் என்று கணக்கு போட்ட குஜராத் மாநிலத்திலுள்ள , வடோதரா பகுதியை சேர்ந்த இன்சூரன்ஸ் ஊழியர் ஒருவர் டிராஃபிக் போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் கட்டுவதை தவிர்ப்பதற்காக தன் ஹெல்மெட்டிலேயே லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சி மற்றும் பியூசி சான்றிதழ்களை ஒட்டியுள்ளார்.
அபராதம் (விதித்த) வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல் என்று நினைத்த ராம் ஷா என்ற அந்த நபர் தினமும் வேலை நிமித்தமாக அவர் வசிக்கும் நகரம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வருபவர், இப்போது இவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இவரிடம் டிராஃபிக் போலீசார் எவரும் விதிமீறல் என்று சொல்லி அபராதம் வசூலிக்க முடியாது. ஏனென்றால், இவர் தன் ஹெல்மெட்டை டிராஃபிக் போலீசார் பார்க்கும்படி எடுத்து காண்பிக்கிறார், டிராஃபிக் போலீசார் கேட்கும் சகல சன்றிதழ்களையும் தன் ஹெல்மெட்டிலேயே இவர் ஒட்டி வைத்துள்ளாரே. இவரிடம் அவர்கள் எப்படி அபாரதம் வசூலிக்க முடியும்?
Gujarat: R Shah, a resident of Vadodara has pasted his driving license, RC, insurance & other documents on his helmet. Says, "Helmet is the first thing I put on before riding a bike, that's why I pasted all documents on it so I don't face any fines as per new traffic regulations" pic.twitter.com/OezdsV1ONT— ANI (@ANI) September 10, 2019
இவரை பற்றி டிவிட்டரில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் புகைப்படத்துடன் வெளியுட்டுள்ள டிவீட்டில், இவர் " பைக்கை ஓட்டுவதற்கு முன்பு முதலில் நான் செய்யும் வேலை ஹெல்மெட் அணிவது தான், அதனால் தான் ஹெல்மெட்டிலேயே எல்லா கோப்புகளையும் ஒட்டி விட்டேன், ஆகவே, இனி புதிய போக்குவரத்து விதிகளினால் நான் எந்த அபராதத்தையும் சந்திக்க வேண்டியதில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இவர், வாகனத்தை ஓட்டும் முன்பு மறக்காமல் ஹெல்மெட்டை அணிந்து கொள்வதால் அபராத சிக்கலில் இருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையை பின்பற்றத் தொடங்கி விட்டார்.
ஏற்கெனவே, உத்திரப்பிரதேசத்தில் டிராஃபிக் போலீசார், காரை ஒட்டி செல்லும்போது காருக்குள் ஹெல்மெட் அணியாமல் இருந்தார் என்று ஒருவருக்கு அபராதம் விதித்ததை தொடர்ந்து அவர் இன்று வரை கார் ஓட்டும் போதும் ஹெல்மெட் அணிந்து செல்கிறார், இந்த விஷயத்தை குறித்து உ.பி மாநில காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் போதும் இவர் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் காரையும் ஹெல்மெட் அணிந்தே ஓட்டுவது தொடர்கிறது.
முந்தைய பதிவுகள்
சமூக ஊடகங்களில் பின் தொடர
-------------------------------------------------------------------------------